மொட்ட சிவா கெட்ட சிவா - பர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘காஞ்சனா-2’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமானார். 'மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் அஸ்வத் தோஸ் ராணா, கோவைசரளா, மதன் பாப், தம்பி ராமைய்யா, சதீஷ், கும்கி அஸ்வின், சுகன்யா, தேவதர்ஷினி, பாண்டு, மயில்சாமி, மனோபாலா, மகாநதி சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஜி.வி.குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.


மொட்ட சிவா கெட்ட சிவா தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற பட்டாஸ் படத்தின் ரீமேக். 80 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அம்பத்தூர் அருகே உள்ள ஒரு தொழிற்சாலையில் செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இரண்டு பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க உள்ளனர். ராகவா லாரன்ஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்த படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படமாகும்.

 மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This Song With Friends?

Related Songs Lyrics...

Quick Search