வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்

ரோம் நகரின் ஏழு குன்றுகளில் ஒன்று காம்பிடோக்லியோ மலை. இதனை காபிடோலின் மலை என்றும் அழைப்பர். ரோமானியப் பேரரசர்கள் காலத்தில் மதம் மற்றும் அரசியல் மையமாகத் திகழ்ந்தது. இங்கு ரோமானியர் பல ஆலயங்களைக் கட்டினர். அவற்றுள் ஜுபிடருக்காகக் கட்டப்பட்ட ஆலயம் மிகப் பெரியது மட்டுமல்ல, புகழ்பெற்றதும் ஆகும். இந்த ஆலயங்களும் காபிடோலின் குன்றில் மன்னர்கள் கட்டிய மற்ற கட்டடங்களும் உலகில் ஒப்பரியது ரோம் என்பதைப் பறைசாற்றுகின்றன.


 கி.பி. 1536-ஆம் ஆண்டு மைக்கேல் ஏஞ்சலோ இந்தச் சதுக்கத்தையும் சுற்றியுள்ள கட்டடங்களையும் மீண்டும் வடிவமைத்தார். சதுக்கத்திற்குச் செல்ல கிரானைட் கற்களாலான அழகான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளையும், சதுக்கத்தையும் அற்புதமான சிலைகள் அலங்கரிக்கின்றன. இந்தச் சதுக்கத்தில் நாவோ அரண்மனை, செனடோரியா மற்றும் கன்சர்வேடரியோ ஆகிய மூன்று முக்கிய அரண்மனைகள் உள்ளன. செனடோரியா அரண்மனை முதலில் கோட்டையாகக் கட்டப்பட்டு பின்னர் ரோம் நகர செனட் கூட்டம் நடக்கும் இடமாக இருந்தது.

மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This Song With Friends?

Related Songs Lyrics...

Quick Search